அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்கும் மழை!!

புதன், 6 ஜனவரி 2021 (13:40 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
வடகிழக்கு பருவக்காற்று காலம் முடிந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கனமழையால் ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
 
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும். 
 
அதோடு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய பகுதியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடுமாம். 
 
அதன்படி சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், பல்லாவரம், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி, போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்