கம்ப்லீட் லாக்டவுன் எனும் போர்வையில் தூங்கும் தமிழகம்!!

சனி, 11 ஜூலை 2020 (08:59 IST)
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
 
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில் நாளை அனைத்து மாவட்டங்களுக்கும் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு முன்னரே அறிவித்திருந்தது. 
 
அதன்படி இரண்டாவது ஞாயிற்றுகிழமையான நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. நாளை கடைகள் யாவும் அடைக்கப்பட்டிருக்கும். பால், மருந்து கடை, மருத்துவமனைகள் மட்டுமே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்