இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும்: தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (10:09 IST)
இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு தெரிவித்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று வழக்கம் போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது
அதிக கட்டணம் வசூலித்த காரணத்தினால் 120 ஆம்னி பேருந்துகளை அரசு பறிமுதல் செய்ததை கண்டித்து இன்று மாலை 6:00 மணி முதல் பேருந்துகள் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
ஆனால் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இன்று வழக்கம் போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் இன்று தங்கள் பயணத்தை செய்யலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.