#தமிழ்நாடு_வாழ்க தமிழர் தரணியாள!’’ பொங்கல் வாழ்த்து கூறிய முதல்வர் முக. ஸ்டாலின்
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (11:19 IST)
தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
எனவே தமிழர்கள் அனைவரும் வீட்டில் கோலமிட்டு, பொங்கலிட்டு தம் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
தமிழக முதல்வர் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், வானுக்கும் மண்ணுக்குமான உறவைச் சூரியனை வணங்கிப் போற்றும் தமிழர் திருநாளாம் #பொங்கல் வாழ்த்துகள்!
சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
#தமிழ்நாடு_வாழ்க தமிழர் தரணியாள! என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தன் டுவிட்டர் பக்கத்தில், உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள், இந்த பண்டிகை நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த நான் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில்,
''அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த #போகி, #தைப்பொங்கல்,#மாட்டுப்பொங்கல் மற்றும் #காணும்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இந்நன்னாட்களில் மக்கள் அனைவரது வாழ்வில் அன்பு,அமைதி நிலவி,அவர்களுக்கு மகிழ்ச்சியையும், விவசாயிகளின் வாழ்வில் வளத்தையும் சேர்க்கட்டும்.
#உழவர்திருநாள் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில், இனிய பொங்கல் நன்னாளில், எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவர் வாழ்விலும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் பெருகவும், நல்ல உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரவும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கவும் பாஜக சார்பில் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.