பருவமழை நேரத்தில் டெங்கு பாதிப்பு: கவனமாக இருக்க சுகாதாரத்துறை எச்சரிக்கை!

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (15:55 IST)
ஒவ்வொரு ஆண்டும் பருவமழை நேரத்தில் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவி வரும் நிலையில் விரைவில் தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால் டெங்கு பாதிப்பு குறித்து கவனமுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது
 
கொசுவினால் ஏற்படக்கூடிய டெங்கு காய்ச்சல் மழை நேரத்தில் பரவும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் வரும் பருவமழை காலகட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுபடுத்த தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுக்கும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் கொசு ஒழிப்பு ஈடுபடவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் காரணமாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் 8 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்