தமிழக பட்ஜெட் தாக்கலாகும் தேதி: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!

Mahendran

திங்கள், 12 பிப்ரவரி 2024 (12:42 IST)
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்த அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 
 
இன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை தொடங்க வேண்டிய நிலையில் ஆளுநர் உரையை ரவி புறக்கணித்ததை அடுத்து அவருக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை வாசித்தார். 
 
இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி குறித்து முடிவு செய்யப்பட்டது. நாளையும், நாளை மறுநாளும் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெறும் என்றும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதில் உரை வழங்குவார் என்றும் அப்பாவு தெரிவித்தார். 
 
மேலும் பிப்ரவரி 19ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் ஆகும் என்றும் பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகும் என்றும் பிப்ரவரி 22ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது என்றும் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்