பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு செய்துள்ள ஏற்பாடுகள்: ஆளுநர் ரவி பேட்டி

Siva

செவ்வாய், 15 அக்டோபர் 2024 (19:50 IST)
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக சேலத்தில் தமிழக ஆளுநர் ரவி பேட்டி அளித்துள்ளார். 
 
வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக கூறிய ஆளுநர் ரவி, அதற்கேற்ற ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பொழிவு அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன் என்றும், அனைத்து விதமான சாத்தியமான நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது என்றும், மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன் என்றும் கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை முன்னெடுக்கும் நிலையில், தமிழக அரசு மழையை சிறப்பாக எதிர்கொண்டு வருவதாக அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்