சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு எதிராக தமிழ்நாடு அரசு புகார்
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (23:00 IST)
காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு எதிராக தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்துள்ளது.
சமீத்தில் முன்னர் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை காரில் வைத்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை வலியுறுத்தியது
இதனை அடுத்து தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி மீது தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்துள்ளது.
அதில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விசாகா கமிட்டி விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு ட்ஜிபி ராஜேஷ் தாஸ் முயற்சித்து வருவதாக இன்று நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்துள்ளது.