இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்.. ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படம் வைரல்..

Siva

வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (08:49 IST)
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக, நேற்று நெல்லை மாவட்டத்திற்கு சென்றார்.

அப்போது, நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் அருகே இருக்கும் பிரபல அல்வா கடை, "இருட்டுக்கடை"க்கு விஜயம் செய்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் சென்றனர்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களை கடை உரிமையாளர்கள் வரவேற்றனர். இதையடுத்து, முதல்வருக்கு சூடான அல்வா வழங்கப்பட்டது. முதல்வர் அதை ருசித்து சாப்பிட்டார்.

மேலும், "இருட்டுக்கடை" என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்த காரணத்தையும் அவர் கடை உரிமையாளர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டார். முந்தைய காலங்களில், லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில் விற்பனை நடைபெற்றதால், அப்போது அந்த கடை இருட்டாக இருக்கும். இதனால், "இருட்டுக்கடை" என்ற பெயர் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.

அத்துடன், அல்வா தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து முதல்வர் ஸ்டாலின், கடை உரிமையாளர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டார். இது குறிப்பிடத்தக்கதாகும்.

இது தொடர்பான புகைப்படங்களை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Edited by Siva

எப்போது நெல்லை வந்தாலும்… #ThirunelveliHalwa pic.twitter.com/Nw7MUrpj43

— M.K.Stalin (@mkstalin) February 6, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்