மாதம்தோறும் கேஸ் சிலிண்டருக்கான விலை நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் வணிக சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலை தீர்மானிக்கின்றன. அதன்படி இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் என இரண்டு வகை சிலிண்டருக்கும் ஒவ்வொரு மாதமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. தற்போது வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.6.50 குறைக்கப்பட்டு ரூ.1959.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர் விலை குறைப்பு ஓட்டல் நடத்துபவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50 ஆக நீடிக்கிறது.
Edit by Prasanth.K