துபாய் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்: என்ன காரணம்?

புதன், 2 மார்ச் 2022 (16:31 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தமிழக முதல்வராக கடந்த மே மாதம் பதவியேற்ற மு க ஸ்டாலின் அதன்பின் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் துபாய் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
துபாயில் நடைபெறும் 192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் அவர் பங்கேற்கிறார் அந்தக் கண்காட்சியில் அவர் தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க உள்ளார் என்று கூறப்படுகிறது 
 
மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய் செல்ல இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்