சுவாதி மொபைல் ஆப் பெண்களை பாதுகாக்க வருகிறது!

வியாழன், 14 ஜூலை 2016 (08:10 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார் இளம்பெண் சுவாதி. மக்கள் நெரிசல் மிகுந்த ஒரு ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
இந்த சம்பவத்தை அடுத்து பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. இதனையடுத்து ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.
 
சுவாதி மொபைல் அப்ளிகேஷன் என்ற ஆப்சை பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக விரைவில் அறிமுகம் செய்யவும் ரயில்வே பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.
இந்த புதிய ஆப்சில் பெண் பயணிகளை பாதுகாக்கும் வகையிலான பல புதிய வசதிகள் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்