சுவாதியை கொன்றவர் இவர் இல்லை: விஷத் தகவலை பரப்பும் சமூக வலைதளங்கள்

வெள்ளி, 1 ஜூலை 2016 (12:27 IST)
சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியை கொலை செய்தவன் என ஒருவரின் புகைப்படம் நேற்று முதல் பரவி வருகிறது. ஆனால் அந்த புகைப்படத்தில் உள்ளவர் சுவாதியை கொலை செய்தவர் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
 
கடந்த 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
குற்றாவளி யார் என்பதை கண்டறிய காவல் துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மக்களும் இந்த கொலை வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் குற்றவாளி யார் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர்.
 
சுவாதியை கொடூரமாக கொலை செய்ததால் குற்றவாளி மீது பொதுமக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த கொலைக்கு தொடர்பில்லாத ஒருவரின் புகைப்படம் பரபரப்பப்பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.


 
 
அந்த புகைப்படத்தில் உள்ள நபர் கடந்த 2011-ம் ஆண்டு பாஜக தலைவர் அத்வானி கோவைக்கு வந்த போது பைப் வெடிகுண்டின் மூலம் அவரை கொல்ல முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவர். பிலால் மாலிக் எனும் இவர் மீது தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
சமீபத்தில் திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் சுவாதியை கொலை செய்தவனின் பெயரை பிலால் மாலிக் என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து பிலால் மாலிக் என்னும் பெயர் கொண்ட இந்த நபரின் புகைப்படத்தை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.
 
இந்த கொலைக்கு தொடர்பில்லாத ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது அவருடைய உயிருக்கு கூட ஆபத்தாக முடியலாம். எனவே இந்த பொய் புகைப்படத்தை மேலும் பரப்ப வேண்டாம் என கேடுக்கொள்கிறோம்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்