இதற்குத்தான் மூன்று மொழி வேண்டும்: கனிமொழிக்கு எஸ்வி சேகர் பதிலடி

ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (21:40 IST)
திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனக்கு இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு சிஐஎஸ்எப் அதிகாரியிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் அவர் தன்னை இந்தியரா? என கேள்வி 
 
கேட்டதாகவும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுக் கொண்டார். இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கனிமொழியின் இந்த டுவிட்டுக்கு பதிலடி கொடுத்த எஸ்வி சேகர் இதற்குதான் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது என்றும், மூன்று மொழிகளில் கற்றுக்கொள்ளும் 
 
கொள்கையை கடைபிடித்து இருந்தால் அந்த சிஐஎஸ்எப் அதிகாரி தமிழ் உள்பட 3 மொழியை கற்றுக் கொண்டு இருப்பார் என்றும் உருது மட்டும் மூன்றாவது மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஏன் இன்னொரு மொழியை மூன்றாவது மொழியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் கூறினார்
 
மேலும் இந்தியா என்று நீங்கள் உச்சரிக்கும் போது அதில் இந்தி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். எஸ்வி சேகரின் இந்த பதிவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது 

That is why 3 language policy should be implemented. Will help future CISF officers to learn Tamil. LIke URUDHU in TN govt./pvt schools u can support HINDHI also to Govt school children. Without HINDI you can’t pronounce இந்தியா

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்