ஆனால், சீனியம்மாள் செய்தியாளர்களுக்கு இந்த வழக்கு குறித்து பேட்டியளித்துள்ளார். சீனியம்மாள் கூறியதாவது, என்னை 2 முறை வந்து போலீசார் விசாரித்தார்கள். எனக்கு உடம்பு சரியில்லை. கூடல்நகரில் உள்ள என் மகள் வீட்டுக்குதான் நான் வந்திருக்கிறேன்.
ஆனால், போலீஸார் யாரோ ஒருவர் தூண்டிவிட்டுதான் என்னிடம் வந்து இந்த விசாரணையை நடத்துகிறார்கள். அப்படியே இருந்தாலும், உமா மகேஸ்வரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், நான் மாநில துணை செயலாளர் அவருகிட்ட போய் நான் நிக்கணும்னு எனக்கு அவசியமே இல்லை. தேவையில்லாமல் என்னை விசாரித்து உண்மையான குற்றவாளியை தப்ப விட்டுவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.