பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்திய பெற்றோர் : மாணவன் விபரீத முடிவு

வியாழன், 25 ஜூலை 2019 (17:14 IST)
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் ,பள்ளிக்குச் செல்லுமாறு மாணவனிடம் கூறியுள்ளனர். ஆனால் பள்ளிக்குச்செல்ல விரும்பமில்லாத அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாட்டம் காடையாம்பட்டி அருகே  வீரியதண்டா என்ற பகுதியில் வசிப்பவர் செல்வம். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் யுவராஜ்(14). அதேபகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்தார்.
 
இந்நிலையில் வீட்டில் பெற்றோர்,யுவராஜை பள்ளிக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் தனக்கு பள்ளிக்குச் சென்று படிக்க விருப்பமில்லை என்று யுவராஜ் தெரிவித்துள்ளார்.இதனைத் ந்தொடர்ந்து யுவராஜை பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தியதால் விவசாயத்திற்கு வாங்கி வைத்திருந்த மருந்தை குடித்து மாணவர் மயங்கிக் கிடந்தார். பின்னர் அவரை மீட்டு தர்மபு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் நேற்று நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்