இந்நிலையில் பலர் கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலியான சான்றிதழ்களை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் “கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டை போலி சான்றிதழ் அளித்து பெற நினைப்பது கவலை அளிக்கிறது. நமது ஒழுக்கம் இவ்வளவு தாழ்ந்து போகும் என நாங்கள் நினைக்கவில்லை. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டியது அவசியமாகிறது” என தெரிவித்துள்ளது.