ஒரு தாயோட ஆசீர்வாதம் இருந்தால்…! – தாயிடம் ஆசீர்வாதம் பெற்ற பிரதமர்!

ஞாயிறு, 13 மார்ச் 2022 (12:29 IST)
4 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் மோடி தனது தாயிடம் ஆசிர்வாதம் பெறும் புகைப்படத்தை ஜோதிராதித்ய சிந்தியா பகிர்ந்துள்ளார்.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பஞ்சாப் தவிர பிற நான்கு மாநிலங்களிலும் பாஜக பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றியை தொடர்ந்து சொந்த மாநிலமான குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தனது தாயிடம் சென்று பிரதமர் மோடி ஆசி பெற்றார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஜோதிராதித்ய சிந்தியா “இதுதான் ஒரு தாயின் வேண்டுதல் மற்றும் ஆசிர்வாதத்தின் சக்தி. நீங்கள் தொடர்ந்து நாட்டின் சேவைக்காக சோர்வின்றி உழைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்