மகாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சங்ராம் ஜக்தாப், தீபாவளி ஷாப்பிங் தொடர்பாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சோலாப்பூரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஜக்தாப், "தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்கும்போது, அதன் பயன்கள் அனைத்தும் இந்துக்களை சென்றடைய வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்று கூறியிருந்தார்.
இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்தார். "பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடும் எந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி.யையும் கட்சி ஏற்காது. மகாராஷ்டிரா, சத்ரபதி சிவாஜி மற்றும் அம்பேத்கரின் மண், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பூமி," என்று அவர் உறுதியாக கூறினார்.
ஜக்தாப்பிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், அவரது பதிலுக்கு பிறகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பவார் தெரிவித்தார். "கட்சி கொள்கைக்கு எதிராக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது," என்று அவர் வலியுறுத்தினார்.