சரவணபவன் ராஜகோபால் உடனே சரணடைய உத்தரவு

செவ்வாய், 9 ஜூலை 2019 (11:27 IST)
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் நேற்று சரணடைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது வயது மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக தற்போது சரணடைய இயலாது என்றும் தான் சரணடைய கால அவகாசம் வழங்குமாறும் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் சரவணபவன் ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை இன்று நீதிபதிகள் நிராகரித்தனர். கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ராஜகோபால் உடனே சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினர்
 
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்