காவிரி வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்

வெள்ளி, 18 மே 2018 (14:53 IST)
திருத்தப்பட்ட மத்திய அரசின் காவிரி அமைப்பு ஆணையத்தின் வரைவுத்திட்டத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இவ்வழக்கை முடித்துவைத்துள்ளது.
காவிரி வழக்கில் திருத்தப்பட்ட மத்திய அரசின் வரைவுத் திட்டத்தை, உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, காவிரி தொடர்பான வழக்குகளை இன்று முடித்து வைத்துள்ளது.  
 
இந்த அமைப்பின் பெயர் காவிரி மேலாண்மை வாரியம் அல்ல காவிரி மேலாண்மை ஆணையம். மேலும் இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் செயல்படும். நீர் பங்கீடு தொடர்பான இறுதி முடிவை ஆணையம் தான் எடுக்கும். இதில் தலையிட மத்திய அரசிற்கு உரிமை இல்லை. அதேபோல் காவிரியில் அணை கட்ட கர்நாடகத்திற்கோ, தமிழகத்திற்கோ உரிமை இல்லை. மாதந்தோறும் அணையின்  நீர் இருப்பு விவரத்தை ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்பிக்க வேண்டும்.
 
இதனையடுத்து காவிரி அமைப்பு ஆணையத்தை பருவ மழைக்கு முன்பாக செயல்படுத்த மத்திய அரசிற்கு உத்தரவிட்டு, காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்