சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே திடீர் பள்ளம்: கார், பேருந்து பள்ளத்தில் சிக்கியது

ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (14:36 IST)
சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் மற்றும் பேருந்து சிக்கியது.


 

 
மெட்ரோ ரயில் பணி காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அதே இடத்தில் இதேபோன்று பள்ளம் ஏற்பட்டு ரசாயணங்கள் வெளியேறியது. தற்போது மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த பள்ளத்தில் மாநகர பேருந்து மற்றும் கார் சிக்கியுள்ளது. அண்ணா சாலை அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பயணிகள் குறித்த விவரம் எதுவும் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்