சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது: சுப்பிரமணியன் சுவாமி

வெள்ளி, 11 மார்ச் 2022 (15:45 IST)
சேது சமுத்திர திட்டத்தை இனி யாராலும் தொட முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்
 
 இன்று காஞ்சிபுரத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட சுப்பிரமணியசாமி அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சேதுசமுத்திர திட்டத்தை இனி யாராலும் தொட முடியாது என்றும் ராமர் சேது பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றும் கூறினார்
 
மேலும் தமிழகத்தில் உள்ள சில முட்டாள் அமைச்சர்கள் மீண்டும் சேது சமுத்திர திட்டத்தை தொடங்குவோம் என்று கூறி வருகிறார்கள் என்றும் ஆனால் அது முடிந்து விட்ட விஷயம் என்றும் அதை யாராலும் இனி தொடங்க முடியாது என்றும் கூறினார் 
 
மேலும்  ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளேன் என்றும் அந்த மனுவில் மார்ச் 22ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்