காமராஜ் கட்டமைப்பை பாழாக்கியவர்கள் நடிகர்கள்: சுப்பிரமணியம் சுவாமி

செவ்வாய், 23 மே 2017 (04:34 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை எதிர்க்கும் தலைவர்களின் எண்ணிக்கை நாள் ஆக ஆக அதிகரித்து கொண்டே வருகிறது. அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் நம்மை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பு உள்ளதாக நினைத்து பல செல்லாக்காசு அரசியல் தலைவர்கள் எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒருவர் சென்னையில் எதிர்ப்பு தெரிவித்து கொடும்பாவி எரித்ததையும் பார்த்தோம்



 


இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ரஜினி மட்டுமின்றி வேறு ஒருசில நடிகர்களையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வருபவர் சுப்பிரமணியம் சுவாமி. ரஜினிக்கு படிப்பறிவில்லை, ஊழல் நடிகர் என்றெல்லாம் விமர்சனம் செய்தவர்  தற்போது மீண்டும் ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:  தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு ரஜினிகாந்த் ஏற்றவர் அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் முதலியவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவர் சினிமாவில் நடிப்பதே சிறந்தது. நல்ல வசனங்களை பேசி மக்களை சந்தோஷப்படுத்தலாம்.

அரசியலில் நுழையும் நட்சத்திரங்கள் தமிழகத்திற்கு காமராஜ் செய்ததை பாழாக்கி இருக்கிறார்கள். அப்போது போடப்பட்ட அடிப்படை கட்டமைப்பையும் அழித்துவிட்டார்கள். சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்