சுப்பிரமணியன் சுவாமியின் அதிரடி ட்வீட்டுகள்

அண்ணாகண்ணன்

செவ்வாய், 30 செப்டம்பர் 2014 (14:04 IST)
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் புகார் அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த அதிமுகவினரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகியிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
 
 
பெங்களுரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா குறித்து, டிவிட்டர் சமூக ஊடகத்தில் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகிறார். அக்.2 அன்று அவர் வெளியிட்ட டிவீட்டில் ஜெயலலிதாவை ஜெயில் லலிதா எனக் கிண்டல் செய்துள்ளார். ஏற்கெனவே ஜெஜெ என்பதற்கு ஜெயலலிதாவுக்கு ஜெயில் என அவர் புதிய விளக்கம் அளித்தது நினைவிருக்கலாம்.
 
அவரது ட்வீட் வருமாறு:
நீதிபதியைப் பற்றி அவதூறு பரப்பவும் குழப்பத்தையும் வன்முறையையும் விளைவிக்கவும் ஜெயில்- லலிதா தன் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சமூகத்துக்கு அவர் ஓர் அச்சுறுத்தலாக விளங்குவதால், அவருக்குப் பிணை கிடைக்காது.
 
திராவிடப் பொறுக்கிகள்- சு.சுவாமியின் அடுத்த ட்வீட்

திராவிடப் பொறுக்கிகள்- சு.சுவாமியின் அடுத்த ட்வீட்
 

 
 
ராவணன் பிறந்த இடமான பிஸ்ராக் (நொய்டா) கிராமத்தில், மூத்தவர்கள் மட்டுமே அவனுக்காக ஒப்பாரி வைக்க வருகிறார்கள் என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியை மேற்கோள் காட்டிய சு.சுவாமி, இப்போது திராவிடப் பொறுக்கிகள் என்ன செய்வார்கள்? அவர்களின் கதாநாயகன், ஒரு பிராமணன் என ட்வீட்டியுள்ளார்.
 
சுப்பிரமணியன் சுவாமியின் மேலும் சில ட்வீட்டுகள். அடுத்த பக்கத்தில்...

சுப்பிரமணியன் சுவாமியின் மேலும் சில ட்வீட்டுகள் வருமாறு:
 
தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பிறகு, நான் சென்னைக்குச் செல்லப் போகிறேன். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் ஜெயிலுக்குப் போகவும் எந்தப் பொறுக்கிக்குத் துணிச்சல் இருக்கிறது என்று பார்க்கப் போறேன்.

மேலும்
 
 
 

எனக்கு எதிராக ஜெயலலிதா தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில், ஜெயலலிதாவைச் சாட்சிக் கூண்டில் ஏற்றி, குறுக்கு விசாரணை செய்ய என்னை அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தைக் கேட்பேன்.

மேலும்
 
 

தமிழக அமைச்சரவையில் உள்ள அழும் குழந்தைகள், அவர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கவில்லை என அறிவார்கள். ஜனாதிபதி ஆட்சி, தவிர்க்க முடியாதது. ஜெயலலிதாவுக்கு மேலும் பல வழக்குகள் காத்திருக்கின்றன.

மேலும்
 
 

அம்மா உணவகம், அம்மா சிமெண்டுக்குப் பிறகு அம்மா ஜெயில் வருமா?

மேலும்

ஜெஜெ = ஜெயலலிதாவுக்கு ஜெயில் (Jail for Jayalalitha=JJ) 


மேலும்
 
 

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் புகார் அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த அதிமுகவினரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகியிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
 
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு குறித்து தமிழ்த் திரையுலகின் சார்பாக வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில் அறவழியில் மௌன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்தும் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
 
பெங்களுர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ரஜினி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி எனத் தமிழ்த் திரையுலகம் நினைத்துக்கொண்டிருக்கிறது என சுவாமி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.


மேலும்
 

ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, பெங்களுருவின் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குக் கைதி எண் 7402 அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரையும் அவரது ஆதரவாளர்களையும் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதன் காரணமாக, டிவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமியைப் பலரும் தமிழில் வறுத்தெடுக்கும் நிலையில், அவர்கள் அனைவரையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என மட்டையடி அடித்திருக்கிறார்.
 
செப்.30 அன்று வெளியிட்ட ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:

 
குற்றவாளி 7402ஐப் பின்தொடர்பவர்கள், தமிழில் ட்வீட்டும்போது, சினிமா வசனங்களை எழுதுகிறார்கள். ஏன்? அவர்கள்  மனநலம் பாதிக்கப்பட்டவர்களா? அல்லது, அவரை (ஜெயலலிதாவை)ப் போல, உயநிலைப் பள்ளி வரை மட்டுமே படித்தவர்களா? என்று கேட்டுள்ளார்.
 
இது, தமிழில் ட்வீட்டுபவர்களை மேலும் கோபமூட்டும் வகையில் அமைந்துள்ளது.
மேலும்
 
 

இன்று மதியம் 3 மணிக்கு முஸ்லிம் அமைப்புகள், சென்னையில் என் வீட்டு முன்பு போராட்டம் நடத்துகிறார்களாம். எதற்காக? ஜெயலலிதாவைத் தண்டிப்பதில் இந்தியக் குற்றவியல் சட்டத்தைப் பின்பற்றாமல், முஸ்லிம் சட்டமான ஷரியாவைப் பின்பற்ற வேண்டும் என்றா?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்