டிவிட்டரில் ஷாருக்கானை 90 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்
சனி, 20 செப்டம்பர் 2014 (17:35 IST)
பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானை சமூக வலைத்தளமான டிவிட்டரில் 90 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
48 வயதாகும் ஷாருக்கான், டிவிட்டர் பின்தொடர்வோர் அடிப்படையில் இந்திய நடிகர்களுள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் இருப்பவர், அமிதாப் பச்சன். அவரை ஒரு கோடியே 4 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் நாயகனான ஷாருக், 2010 ஜூலை மாதம் டிவிட்டரில் இணைந்தார். இது வரை 7718 டிவிட்டுகளை இட்டுள்ளார். அவரது டிவிட்டர் முகவரி - https://twitter.com/iamsrk
சக இந்தி நடிகர்களுள் அமீர்கானை 84 லட்சத்து 50 ஆயிரம் பேரும் சல்மான்கானை 82 லட்சத்து 26 ஆயிரம் பேரும் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.