ரஜினி கட்சி தொடங்கவில்லை, பாஜக தான் புதிய கிளையை தொடங்கியுள்ளது: சொன்னது யார்?

வியாழன், 3 டிசம்பர் 2020 (18:34 IST)
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றும் பாஜகதான் புதிய கிளையை தொடங்கி இருப்பதாகவும் பிரபலம் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது அரசியல் கட்சி குறித்த முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது தெரிந்ததே. ரஜினியின் அரசியல் அறிவிப்பு அவரது ஆதரவாளர்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியையும் அவரது எதிர்ப்பாளர்களுக்கு உச்சகட்ட கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது
 
அந்த வகையில் ரஜினியின் எதிர்ப்பாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ரஜினியின் கட்சி பாஜகவின் கிளை கட்சி என்றும் பாஜகவின் உத்தரவால் தான் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் சுபவீரபாண்டியன் ரஜினியின் அரசியல் குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஜினிகாந்த் புதிய கட்சியைத் தொடங்கவில்லை. பாஜக தன் புதிய கிளையைத் தொடங்கியுள்ளது.

ரஜினிகாந்த் புதிய கட்சியைத் தொடங்கவில்லை. பாஜக தன் புதிய கிளையைத் தொடங்கியுள்ளது. #Rajinikanth #ரஜினிகாந்த் pic.twitter.com/SXgnKckNZD

— SubaVeerapandian (@Suba_Vee) December 3, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்