ரஜினி, கமல் கோழைகள்; விடாது கருப்பு சுப்பிரமணியன் சுவாமி

புதன், 29 மார்ச் 2017 (14:58 IST)
நடிகர்கள் கமல் மற்றும் ரஜினிகாந்த ஆகியோரை கோழைகள் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையான விமர்சித்துள்ளார். 


 

 
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:-
 
நடிகர் கமல்ஹாசனை பொறுத்தவரையில் அகங்காரம் பிடித்த முட்டாள். சினிமாகாரங்களுக்கு எப்பவும் பயம்தான். ரஜினிகாந்த பயந்துபோய் இலங்கைக்கு செல்லாமல் இருந்துவிட்டார். ஒரு நிகழ்ச்சியின் அழைப்பிதழை ஏற்றுக்கொள்ளும் போதே எல்லாவற்றையும் யோசிக்க வேண்டாமா?
 
பின் வைகோ, திருமாவளவன் ஆகியொர் கூறியதால் போகாமல் பயந்து போய் அறிக்கை விடுகிறார், என்று கூறியுள்ளார்.
 
தமிழக மக்கள் மீதான இவரது சீண்டல் தொடர்ந்து நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. கமலும், சுப்பிரமணியன் சுவாமியும் ட்விட்டரில் சொற் போர் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினியை பற்றி விமர்சித்த சுவாமி கமலையும் விடாமல் சேர்த்து விமர்சித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்