கொரோனாவிற்கு பிறகு இந்தியாவில் பகீர் கிளப்பும் விஷயமாக மாறியுள்ளது வெட்டுக்கிளிகள் தாக்குதல். பாகிஸ்தான் வழியாக இந்தியாவில் நுழைந்த வெட்டுக்கிளிகள் வடமேற்கு பகுதிகளான மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எனினும் இவை தமிழகத்திற்கு வர வாய்ப்பில்லை என தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது, எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள வரலாற்று ஆய்வாளரும், மதுரை எம்.பியுமான சு.வெங்கடேசன் ” வாய்மொழி மரபின் வழியாகவும், வரலாற்று குறிப்புகள் மூலமாக தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பெறும் அழிவை ஏற்படுத்தியதற்கான சான்று உள்ளது” என்று கூறியுள்ளார்.