சீருடை இருந்தால் போதும்: மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யலாம்

வெள்ளி, 18 மே 2018 (09:04 IST)
இலவச பாஸ் இல்லாத பள்ளி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய நடத்துனர் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து கொண்டிருக்கும் நிலையில் மாணவர்கள் சீருடையில் இருந்தாலே போதும், பாஸ் இருக்க வேண்டிய கட்டாயமில்லை, அவர்கள் பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மாணவர்கள் சீருடையில் இருந்தால் அவர்களை பேருந்தில் பயணம் செய்ய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி மாணவர்கள் சீருடையில் இருந்தால் பேருந்து பயணத்திற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் மாணவர்கள் பள்ளி செல்வதற்கு உண்டான போக்குவரத்தில் எந்தவித இடைஞ்சலும் இல்லாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என்றாலும் அமைச்சரின் இந்த உத்தரவை நடத்துனர், ஓட்டுனர் சரியாக பின்பற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
முன்னதாக அவர் கும்மிடிபூண்டியில் உள்ள அதநவீன சோதனை சாவடியை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்