மாணவர்களை துன்புறுத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்

சனி, 16 அக்டோபர் 2021 (15:57 IST)
பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது எனவும், மாணவர்களிடம் எந்தப் பாகுபாடும் காட்டக்கூடாது எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் நீண்ட மாதங்கள் கழித்து கடந்த மாதம் முதலாக பள்ளிகள் சுழற்சி முறையில் செயல்பட்டு வருகின்றன.

சமீபத்தில் கடலூரில் உள்ள நந்தனார் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு வரவில்லை என்பதற்காக அந்த மாணவரை ஆசிரியர் மூர்க்கமாக தாக்கியுள்ளார். அதை வகுப்பறையில் இருந்த பிற மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பெரும் பரபரப்பு எழுந்தது.

இதுகுறித்து அந்த ஆசிரியர் மீது சிறுவர்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் , பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கல் துன்புறுத்தக் கூடாது எனவும், மாணவர்களிடம் எந்தப் பாகுபாடும் காட்டக்கூடாது எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களைத் துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்