மாணாவர்களின் போராட்டத்துக்கு களங்கம் ஏற்படுள்ளது: கிரண் பேடி

புதன், 25 ஜனவரி 2017 (20:24 IST)
சென்னையில் அறவழியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்று புதுச்சேரி ஆளூநர் கிரண் பேடி கூறியுள்ளார்.


 

 
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் முதன் முறையாக மாடுகளை வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்துக்கொண்ட ஆளுநர் கிரண் பேடி கூறியதாவது:-
 
ஜல்லிக்கட்டை நான் எதிர்க்கவில்லை. சென்னையில் அறவழியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சதி வேலையில் ஈடுபட்டது யார் என்பது விசாரணை மூலமே தெரியவரும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்