மதம் மாறக்கோரி வார்டன் டார்சர்: மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை

வியாழன், 20 ஜனவரி 2022 (18:41 IST)
12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் விடுதி வார்டன் மதம் மாறச்சொல்லி வற்புறுத்தியதால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

 
தற்போது 12ம் வகுப்பில் படித்து வரும் மாணவி லாவன்யா தூய இருதய மேல்நிலைபள்ளியில் படித்து வருகிறார். இவர் செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
 
அப்போது அங்கு பரிசோதிக்க வந்த டாக்டரிடம், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற தொடர்ந்து வற்புறத்தி கடுமையாக திட்டியதாகவும் இதனால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் மருத்துவர்கள் இது குறித்து போலீஸில் தகவல் கொடுத்தனர். 
 
இதனிடையே இன்று மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் பள்ளி மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் உடலை வாங்க மறுத்தும், அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும் போராடியும் வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்