யாருக்கும் உரிமை இல்லை: விஜய் பேச்சு குறித்து உதயநிதி..!

சனி, 17 ஜூன் 2023 (13:48 IST)
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் யார் வரவேண்டும் யார் வர வேண்டாம் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை என்றும் இன்று கல்வி விழாவில் விஜய் பேசினார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ’விஜய் நல்லது தானே சொல்லி இருக்கிறார்’ என்று தெரிவித்தார். 
 
இன்று நடைபெற்ற கல்வி விழாவில் விஜய் பேசிய 10 நிமிடம் பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்றும் உங்கள் பெற்றோர்களையும் வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் என்றும் விஜய் கூஉறியிருந்தார் 
 
இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி பேசிய போது ’வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று விஜய் நல்லது தானே கூறி இருக்கிறார். அதேபோல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் யாரும் வர வேண்டும், யார் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்