பக்கவாதத்திற்கு உடனடி சிகிச்சை தேவை - அப்போல்லோ மருத்துவர்கள்

திங்கள், 31 அக்டோபர் 2022 (22:46 IST)
அப்போலோ மருத்துவமனை விழிப்புணர்வு கருத்தரங்கில் டாக்டர்கள் வலியுறுத்தல்பக்காவாதமாக ஆக வேண்டாம் பக்கவாதம் பக்கவாதம் ஏற்பட்ட அடுத்த நிமிடத்தில் ஆயரகனகன நரம்புகள் செயலிழக்கும்  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
 
பக்கவாதம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியத்தை பிரபல மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
 
பக்கவாதம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நிமிடமும் சுமார் 19 லட்சம் நரம்புகள் செயலிழக்கும்
அபாயம் உள்ளதால் பக்கவாதத்திற்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டியதன்
முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் உணர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
 
கரூர் அப்போலோ மருத்துவமனையில் "பக்கவாதம் : கண்டறிதல், சிகிச்சை மற்றும்
தடுப்புக்கான விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
 
இந்தக் கருத்தரங்கில் மரு. சரவணன்-( நரம்பியல் நிபுணர்), மரு. ஸ்ரீதர்( நிர்வாக இயக்குனர்)  கரூர் அப்போலோ மருத்துவமனை ஆகியோர் கலந்து கொண்டு பக்கவாதம் குறித்த முக்கிய தகவல்களை விளக்கிப்பேசினர்.
 
இந்தக் கருத்தரங்கில் டாக்டர்கள் தெரிவித்ததாவது :
 
ஒரு பக்கம் உள்ள கை கால் ‌ செயலிழக்கும் நோய் பக்கவாதம். இவ்வாறான செயலிழப்பு
திடீரென்று வருவதே பக்கவாதத்தின் அறிகுறி. இந்நோயை மருத்துவ ரீதியாக ஆங்கிலத்தில் செரிப்ரோ வாஸ்குலர் ஆக்சிடென்ட் (Cerebro vascular accident) என்று குறிப்பிடுகிறார்கள்.
 
வயது முதிர்வு மற்றும் பல்வேறு காரணங்களால் இரத்தக் குழாய்களில் அடைப்பு
ஏற்படுவதாலும், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க
முடியாததாலும், கெட்ட கொழுப்பின் அளவு இரத்தத்தில் அதிகரிப்பதாலும், புகை பிடித்தல்
மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களினாலும், பரம்பரைக் காரணிகளாலும்
பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
 
இந்நோயில் இரண்டு வகைகள் உள்ளன. 85 விழுக்காடு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு
வரும் இஸ்கீமிக் (ischemic) ஸ்ட்ரோக். இரண்டாவது இரத்தக்குழாய்களில் வெடிப்பு
ஏற்படுவதால் வரும் ஹெமரேஜிக் (hemorrhagic) ஸ்ட்ரோக்.
 
எம்ஆர்ஐ ஸ்கேன் அல்லது சிடி ஸ்கேன் பரிசோதனைகள் மூலமாக எந்த அளவுக்கு
பக்கவாதத்தின் பாதிப்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
 
சர்க்கரை அளவு, கொழுப்பு சத்துக்களின் அளவுகள், கல்லீரல், சிறுநீரகம் போன்ற
உறுப்புகளின் செயல்பாட்டு நிலையை அறிந்துகொள்ளச் செய்யும் இரத்தப் பரிசோதனைகள்
 
எக்கோ கார்டியோ கிராம், CV-Doppler போன்ற பரிசோதனைகளும் பக்கவாதம் ஏற்பட்ட
நபர்களுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.
 
இரத்தக்குழாய்கள் அடைப்பு ஏற்பட்டு, பக்கவாதம் நிகழ்ந்த உடனே அதிவிரைவில் இதற்கான சிகிச்சைக்குத் தயார் நிலையில் உள்ள மருத்துவமனைகளை அணுகிச் சிகிச்சை அளிக்க வேண்டும். இதில் ஏற்படும் காலதாமதத்தால் உடலின் ஒட்டுமொத்த இயக்கமே முடங்கும் அபாயம் உள்ளது. பக்கவாதம் ஏற்பட்டு அதிகபட்சமாக 3 நேரத்திற்குள் இந்நோய்க்குச் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைகளை அணுகுபவர்களுக்குத் த்ராம்போலைசிஸ் என்ற ஊசி மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. டினக்ட்டிப்ளேஸ், அல்டிப்ளேஸ் என்று இருவகை மருந்துகள் இத்தருணத்தில் உபயோகப்படுத்தப்படுகின்றன.
 
பக்கவாதம் நிகழ்ந்த பிறகு ஒரு நிமிடத்திற்கு 19 லட்சம் நரம்புகள் செயலிழந்து போகிறது.
பத்து நிமிட தாமதம் கூட கிட்டத்திட்ட இரண்டு கோடி நரம்புகளைச் செயலிழக்க
வைத்துவிடும் என்பதை பொதுமக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
 
இந்நோய்த் தாக்குதலுக்கு ஏற்பட்டவர்களை உறவினர்கள் உடனடியாகச் சிகிச்சைக்கு அழைத்து வரவேண்டும். இவ்வாறான உடனடி சிகிச்சைக்குப் பிறகும் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட கை, கால்களைத் தொடர்ச்சியான இயன்முறை சிகிச்சை (Physiotherapy) மூலம் சரி செய்யலாம். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்