சர்வதேச தரத்தில் எழும்பூர் ரயில்நிலையம்: ரூ.734.90 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும் என தகவல்

திங்கள், 31 அக்டோபர் 2022 (20:39 IST)
சர்வதேச தரத்தில் எழும்பூர் ரயில்நிலையம்: ரூ.734.90 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும் என தகவல்
சர்வதேச தரத்தில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 
 
ரூ.734.90 கோடி மதிப்பீட்டில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்படும் என்றும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்றும் தென்னக ரயில்வே கூறியுள்ளது
 
மேலும் புதுப்பிக்கப்பட்டவுடன் எழும்பூர் ரயில் நிலையம் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் விதமாக கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 114 ஆண்டுகள் பழமையானது என்பதும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அனைத்து ரயில்களும் கிளம்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த ரயில் நிலையத்தை புதுப்பிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது அது நிறைவேற்றப்பட உள்ளது 
 
ரூ.734.90 கோடி  மதிப்பில் கண்கவர் ஓவியங்கள் மின்சார நகர்வு படிக்கட்டுகள் நுழைவாயில் பயணச்சீட்டு வழங்கும் இடங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை தற்போது தென்னக ரயில்வே  வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்