அரசு பள்ளியில் மாணவியை கடித்து குதறிய நாய்! சங்ககிரியில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

புதன், 21 ஆகஸ்ட் 2024 (10:08 IST)
அரசு பள்ளியில் படிக்கும் மாணவியை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் சங்ககிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை கடித்து குதறி வருகிறது என்பதும் சில உயிரிழப்புகள் ஏற்பட்டு இருந்தும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்தது.
 
இந்த நிலையில் சங்ககிரி அருகே நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500 மாணவ மாணவிகள் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த பள்ளியின் வளாகத்திலேயே மாணவி ஒருவரை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாலமுருகன் - சத்யா தம்பதியின் மகள் ஹரிணி ஸ்ரீ, சங்ககிரி நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் இவர் நேற்று காலை பள்ளிக்குச் சென்றபோது பள்ளியின் வளாகத்தில் சுற்றுத் திரிந்த தெரு நாய்கள் திடீரென அவரை கடித்து குதறின.
 
இதனை அடுத்து அந்த அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அந்த மாணவிக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
அரசு பள்ளி வளாகத்திலேயே நாய்கள் சுற்றித்திரிந்து வருகிறது என்றும் பள்ளி நிர்வாகம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மாணவ மாணவியருக்கு இந்த பள்ளியில் பாதுகாப்பு இல்லை என்றும் கல்வி அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்