அரசுப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்!

J.Durai

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:53 IST)
ஓமலூர் அருகே பல்பாக்கி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது.
 
இந்த பள்ளியை மேம்படுத்தும் வகையில் பல்பாக்கி கிராமத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு தேவையான கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது.
 
இதில் ஸ்மார்ட் வகுப்புக்கு தேவையான எல்.இ.டி. டிவிக்கள் மற்றும் சேர், மின்விசிறி, வாட்டர் பில்டர், நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் உட்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்கள், கிராம மக்கள் ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளியில் வழங்கினர்.
 
தொடர்ந்து மாணவர்களின்  கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
 
பள்ளித் தலைமையாசிரியர் கிராம மக்கள் கொண்டு வந்த கல்வி சீர்வரிசையை பெற்றுக் கொண்டார். 
 
இவ்விழாவில் ஆசிரியர்கள், கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்