முதலமைச்சர் தைரியம் கொடுத்ததால் குணமானேன்: வடிவேலு நெகிழ்ச்சி!

ஞாயிறு, 2 ஜனவரி 2022 (07:57 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில்தான் குணமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கொடுத்த தைரியம்தான் என நெகிழ்ச்சியுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் 
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த உடனே முதலமைச்சர் முக ஸ்டாலின் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டது தைரியம் அளித்தது எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று அவர் கூறினார். 
 
மேலும் கொரோனாவை எதிர்கொள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள் அளித்த ஊக்கம் என்னை விரைவாக குணமடைய உதவியது என்றும் நான் மருத்துவமனையில் இருந்தபோது எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்
 
மேலும் பொதுமக்கள் அனைவரும் தயவுசெய்து மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்