மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை: முதல்வர் ஸ்டாலின்
செவ்வாய், 22 மார்ச் 2022 (14:23 IST)
மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சி நடந்தபோது மக்கள் நல பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதிமுக ஆட்சியின் போது மக்கள் நல பணியாளர்கள் அனைவரும் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்
இதுகுறித்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்
இதனால் வேலை இழந்த மக்கள் நல பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.