திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 12 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் நேற்று இரவு அவர் மறைந்தார்.
தற்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், தற்போது பேராசியர் அன்பழகன் உடல் அங்கலரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து இறுதி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
அதன்பிறகு, கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் பேராசிரியர் அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட கொண்டுவரப்பட்டு, அவரது உடல் தற்போது தகனம் செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், வைரமுத்து, திருச்சி சிவா, டி;ஆர் பாலு, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் கதறி அழுது இறுதி அஞ்சலி செலுத்தினர்.