அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்க வேண்டியது கடமை… சலுகை அல்ல – முதல்வருக்கு ஸ்டாலின் பதில்!

வெள்ளி, 23 அக்டோபர் 2020 (11:50 IST)
கொரோனா தடுப்பூசியை இலவசமாகக் கொடுக்க வேண்டியது கடமை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி இன்று  பாஜக அரசு சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அம்மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று புதுகோட்டையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரொனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்ததும் அனைத்து மக்களுக்கும் அரசின் செலவில் இலவச தடுபூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஏதோ பெரிய சாதனை வாக்குறுதி போல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரழிவு காலத்தில் மக்களைக் காக்கும் மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது ஒரு மக்கள்நல அரசின் கடமை. அந்தக் கடமையை ஏதோ மக்களுக்கு, தான் காட்டும் மாபெரும் சலுகையைப் போல பழனிசாமி நினைத்துக் கொள்கிறார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாத முதலமைச்சர், இலவசத் தடுப்பூசி என்று அறிவிப்பதன் மூலமாகத் தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்ளப் போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்