இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் முனைப்பாக உள்ளார். எனவே 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அடுத்து வரப்போகும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஜெயித்து ஆட்சியைப் பிடிக்க கணக்குப் போட்டு வருகிறார். அவருடைய பிரசாரத்திலும் இது நன்றாகவே தெரிந்தது. தனது பிரசாரத்தின் போதும் இதை தெரிவித்துவருகிறார்.