அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஊழல் குறித்து பேசுவதா? கவர்னருக்கு ஸ்டாலின் கேள்வி

சனி, 6 அக்டோபர் 2018 (21:50 IST)
துணை வேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியிருப்பதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் கவர்னரே துணைவேந்தர் விவகாரத்தில் ஊழல் என்று பேசுவது ஆச்சரியம் அளிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளுநர், ஊழல் குறித்து மேடையில் பேசுவது எந்த பலனையும் கொடுக்காது என்றும், தமிழக அரசு மீது திமுக அளித்த புகார்கள் குறித்து ஆளுநர் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திமுக அளித்த புகார்கள் மீது ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் துணைவேந்தரை ஆளுநர் மட்டுமே நியமனம் செய்கிறார், அரசு நியமனம் செய்வதில்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியுள்ளது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்