துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ஊழல் - ஆளுநர் ஓப்பன் டாக்

சனி, 6 அக்டோபர் 2018 (11:40 IST)
துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி பணம் புரண்டது என ஆளுநர் பன்வாரிலால் ரோஹித் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.

 
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்படும் போது பல கோடிகள் பண் புரள்வதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், இந்த புகாரை ஆளுநர் ஒத்துக்கொண்டுள்ளார். சென்னையில் உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் பேசிய ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் “ துணை வேந்தார் நியமனத்தில் முறைகேடு நடந்ததைக் கண்டு வருத்தமடைந்து அதை மாற்ற நினைத்தேன். அதில் பல கோடி பணம் புரண்டது. துணைவேந்தர் நியமனம் தகுதி அடிப்படையில்தான் நடைபெற வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்