அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் இரண்டு தடவை அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு பாலியல் பலாத்காரம் அல்லது கொலையோ காரணமில்லை என்று உறுதியாகி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது
மேலும், ஸ்ரீமதி மரணத்தின் பின்னணியில் பலாத்காரமும், இல்லை, கொலையும் இல்லை; இது தற்கொலை தான் எனவும், மாணவர்களைப் படிக்குமாறு ஆசிரியர்கள் கூறுவது தற்கொலைக்குத் தூண்டும் செயல் அல்ல என உயர் நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகளை எதிர்த்து முறையீடு செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.