தமிழக மீனவர்கள் 19 பேர் நடுக்கடலில் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

வியாழன், 14 செப்டம்பர் 2023 (07:36 IST)
தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படை கைது செய்வது வழக்கமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகளை மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இன்று மீண்டும் 19 மீனவர்கள் இலங்கை கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறையில் இருந்து நேற்று மூன்று விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்களை நெடுந்தீவு அருகே கடற்படையினர் சுற்றிபாளையத்து கைது செய்தனர். 
 
இவர்கள் அனைவரும் காங்கேச்அன் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர்களால் கைது செய்வதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் மீண்டும் 19 தமிழகம் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்