விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: தமிழக அரசு அறிவிப்பு!

வெள்ளி, 22 ஜூலை 2022 (10:48 IST)
மாநில அளவில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
தமிழகத்தில் மாநில அளவில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
 
தமிழகத்தில் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூபாய் 3.1 கோடியில் இருந்து 4 கோடியாக உயர்த்த போவதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் மாநில விளையாட்டு சங்கங்களில் ஒலிம்பிக் விளையாட்டுக்கு ரூபாய் 20 லட்சம் மானியம் உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான பயிற்சி முகாம், சீருடை ஆகியவைகளுக்கான நிதியும் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்