அமெரிக்காவின் யூஜின் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்திய ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா தலைமையில் இந்திய தடகள அணி இந்த போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய நீரஜ் சோப்ரா தனது முதல் முறையிலேயே 88.39 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அசத்தினார்.
இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இறுதி சுற்றிற்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். அதேபோல இந்திய வீரர்களான அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர், அன்னு ராணி ஆகியோரும் இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.