சபரிமலை யாத்திரை, கிறிஸ்துமஸை ஒட்டி சிறப்பு ரயில்கள்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஞாயிறு, 28 நவம்பர் 2021 (08:56 IST)
சபரிமலை யாத்திரை மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக மக்கள் பலர் பயணம் மேற்கொள்வர் என்பதால் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சபரிமலை யாத்திரைக்கும் மக்கள் பலர் பயணிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க டிசம்பர் மாதத்தில் முன்பதிவு பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், டிசம்பர் 3,10,17,24,31 மற்றும் ஜனவரி 7,10,12,14 ஆகிய தேதிகளில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். அதேபோல கொல்லத்திலிருந்து டிசம்பர் 5,12,19,26 மற்றும் ஜனவரி 2,9,11,13,16 உள்ளிட்ட தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

அதுபோல நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு டிசம்பர் 24ம் தேதி ஒரு ரயிலும், நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு டிசம்பர் 26ம் தேதி ஒரு சிறப்பு ரயிலும் செயல்படும். சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு 23ம் தேதியும், தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு 27ம் தேதியும் சிறப்பு ரயில்கள் புறப்படும். இதற்கான முன்பதிவுகள் இன்று தொடங்குகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்